கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினருக்கு முக்கிய அறிவிப்பு

Weather
By Pavi Sep 20, 2026 02:45 AM GMT
Report

வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ளதாகவும், அது அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கத்தால் வங்காள விரிகுடா கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினர் அவதானத்துடன் செயற்படுமாறும், எதிர்வரும் வானிலை அறிவிப்புகள் மற்றும் முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் கங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனோஜன் விவகாரத்தில் நரேந்திர மோடியின் உதவி! அரசாங்கத்துக்கு மனோ எடுத்துரைப்பு

அனோஜன் விவகாரத்தில் நரேந்திர மோடியின் உதவி! அரசாங்கத்துக்கு மனோ எடுத்துரைப்பு

இடியுடன் கூடிய மழை

நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினருக்கு முக்கிய அறிவிப்பு | Important Announcement For The Fishing Communities

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30-40 கி.மீ. வரை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக கங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.

மேலும், அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதுடன், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.0 - 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.  

அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர அழுத்தம் அவசியம்! ஜனாதிபதியிடம் சிறீதரம் எம்.பி வேண்டுகோள்

அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர அழுத்தம் அவசியம்! ஜனாதிபதியிடம் சிறீதரம் எம்.பி வேண்டுகோள்

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உருவச்சிலை! திலீபன் நினைவேந்தலால் பொங்கி எழுந்த சரத் வீரசேகர

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உருவச்சிலை! திலீபன் நினைவேந்தலால் பொங்கி எழுந்த சரத் வீரசேகர

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்