யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
Jaffna
Jaffna Teaching Hospital
Weather
By Independent Writer
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அதன்படி, சுவாசத் தொகுதி சிகிச்சைப்பிரிவு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இன்று (26) வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய சுவாசத் தொகுதி சிகிச்சைப்பிரிவிற்கு வரும் நோயாளிகள் நுழைவாயில் இலக்கம் 3இன் ஊடாக வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வெளியான அறிக்கை
அந்த அறிக்கையில், மழை காரணமாக சுவாசத் தொகுதி சிகிச்சைப்பிரிவானது தற்காலிகமாக நுழைவாயில் இலக்கம் 3 அருகில் இடமாற்றப்பட்டுள்ளது.

இதனால் சுவாசத்தொகுதி சிகிச்சைப்பிரிவிற்கு வரும் நோயாளிகள் நுழைவாயில் இலக்கம் 3இன் ஊடாக வருகைதந்து தங்களது சேவைகளை பெற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |