யாழில் அபாய கட்டம் நீங்கவில்லை -பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

corona jaffna people mahesan
By Jaso Jun 18, 2021 07:03 PM GMT
Report

யாழ் மாவட்டத்தை அவதானிக்கும் போது இன்னும் அபாயமான கட்டம் நீங்கவில்லை .எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அரச அதிபர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 5000ரூபா கொடுப்பனவு முதற்கட்டமாக 71712 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் முதற்கட்டமாக சமுர்த்தி பெறுவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ,சிறுநீரக கொடுப்பனவு பெறுவோர்,முதியோர் கொடுப்பனவுகள் பெறுவோருக்கே வழங்கப்பட்டுள்ளன.ஏனையோருக்கும் விரைவில் வழங்குவதற்கு எதிர்பார்க்கிறோம்.

சமுர்த்தி பெறாதவர்களுக்கான 5000ரூபா கொடுப்பனவுக்கான நிதி வந்தடைந்ததும் ஏனையோருக்கும் வழங்கப்படும்.

கொரோனா நிலைமையை அவதானிக்கும்போது நேற்றைய தினம் மாத்திரம் 83 கொரோனா தொற்றாளர்கள் யாழில் கண்டறியப்பட்டுள்ளனர். 1754 குடும்பங்களைச் சேர்ந்த 5613 நபர்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர். யாழில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4668 ஆக அதிகரித்துள்ளது.அதேநேரம் 63 ஆக கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோப்பாய் இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் 321 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களும் வட்டுக்கோட்டை இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் 159 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை நல்லூர் அரசடி பகுதி இன்று முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பதற்கு சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணிக்கு நீக்கப்படுகிறது. மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை காணப்படும் என்ற நிபந்தனையுடன் தான் பயணத்தடை தளர்த்தப்படவுள்ளது.பயணத் தடை தளர்த்தப்படும்போது அவசியமான தேவைகளுக்கு மாத்திரம் பொதுமக்களை வெளியில் செல்லுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் இந்தப் பயணத்தடையானது 23 புதன்கிழமை இரவு 10 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு மீண்டும் 25 வெள்ளிக்கிழமை அதிகாலை 04 மணி வரை தொடருமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் சூழ்நிலைக்கேற்ப இந்த நிலைகளில் மாற்றம் வரலாம். ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கு தொடர்ந்தும் தடை காணப்படுகின்றது.

நாளாந்த தொற்று நிலைகளில் யாழ் மாவட்டத்தை அவதானிக்கும் போது இன்னும் அபாயமான கட்டம் நீங்கவில்லை .எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்படவேண்டும்- என்றார்.  

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி