ரொறன்ரோ நோக்கி பயணிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Toronto
Canada
World
By Harrish
கனடா(Canada) - ரொறன்ரோ பகுதியில் அதிக பனிப்பொழிவு காணப்படுவதாக கனேடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், ரொறன்ரோ(Toronto) உட்பட சில பகுதிகளில் போக்குவரத்து மேற்கொள்வது தொடர்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சில இடங்களில் ஐந்து முதல் பத்து சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதிக பனிப்பொழிவு
இந்நிலையில், வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் என்பதால் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அதிக பனிப்பொழிவினால் வாகன சாரதிகள் வீதியை பார்ப்பதில் சிரமங்கள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்.. |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்