வெளிநாடொன்றில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை
தென்கொரியாவில் (South korea) காட்டுத்தீ பரவும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கைத் தொழிலாளர்களை கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு (Srilankans) எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும் பதிவாகவில்லை எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தென்கொரியாவின் தெற்கு பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் ஏற்பட்ட காட்டுத்தீயில் 16 பேர் உயிரிழந்ததாகவும் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மீண்டும் காட்டுத்தீ
காட்டுத்தீ காரணமாக அண்டாங் மற்றும் இதர தென்கிழக்கு நகரங்கள் மற்றும் டவுன்களில் வசிப்பவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்டாங் பகுதியில் வசிக்கும் 5500-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக தீயணைப்புத் துறையினர் காட்டுத்தீ பெரும்பாலும் அணைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.
எனினும், வறண்ட வானிலை மற்றும் அதீத காற்றோட்டம் காரணமாக மீண்டும் காட்டுத்தீ பரவியுள்ளது. காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், 130 ஹெலிகாப்டர்கள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அவசரநிலை
இவ்வாறான நிலையில், காட்டுத்தீ பரவும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கைத் தொழிலாளர்களைக் கேட்டுக்கொள்வதாக இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் தென்கொரியாவில் உள்ள இலங்கையர்கள் 2 735 2966, 2 735 2967 அல்லது 2 794 2968 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறும் தென்கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 4 நாட்கள் முன்
