பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை : காவல்துறை எச்சரிக்கை
பேருந்து தரிப்பிடங்களில் தனியார் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் இலங்கை காவல்துறை அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, பேருந்து நிறுத்தங்களை மறைக்கும் வகையிலும், இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் வீதியின் நடுவே பயணிகளை ஏற்றவும் இறக்கவும் வேண்டிய நிலை ஏற்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்துகள்
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வசதியுடன் கூடிய பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பாதுகாப்பாக பேருந்துகளில் ஏறி இறங்குவதை உறுதி செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பேருந்து நிறுத்தத்திற்கு 30 மீற்றர் முன்னதாகவும், அதன் வெளியேறும் பகுதியிலிருந்து 15 மீற்றர் வரையிலும் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதியை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக வீதிப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 20 மணி நேரம் முன்