பழுதடைந்த விதை உருளைக்கிழங்குகளுக்கு பதிலாக புதிய விதை : விவசாய அமைச்சு
யாழ்ப்பாணம் குப்பாவெளி பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலையில் உள்ள பழுதடைந்த விதை உருளைக்கிழங்குகளுக்கு பதிலாக புதிய விதை உருளைக்கிழங்குகளை வழங்குவதற்கு அவற்றை இறக்குமதி செய்த நிறுவனம் விவசாய அமைச்சுடன் இணக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் விவசாய அமைச்சு மேலும் அறியத்தருகையில்,
“விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக இந்த விதை உருளைக்கிழங்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
விதை உருளைக்கிழங்கு கையிருப்பு
யாழ்ப்பாணப் பகுதியில் அண்மையில் பெய்த மழையினால் சேமிப்புக் கிடங்கில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதோடு, விதை உருளைக்கிழங்கு கையிருப்பு பூஞ்சைகளினால் கெட்டுப் போயுள்ளது.
விவசாய அமைச்சின் விவசாயத் துறை புத்தாக்கத் திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனம் ஒன்றினால் இந்த விதை உருளைக்கிழங்கு அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
சுமார் 20 மெற்றிக் தொன் கொண்ட விதை உருளைக்கிழங்கு கையிருப்பு சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியானது என்பது குறிப்பிடத்தக்கது.” என குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |