உழவு இயந்திர போர்வையில் சொகுசு கார் இறக்குமதி: அம்பலமாகிய மோசடி!
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி உழவு இயந்திரங்கள் என்ற போர்வையில் சொகுசு கார்களை இறக்குமதி செய்த மோசடியொன்று அரசாங்க கணக்குகள் தொடர்பான குழுவில் (COPA)தகவல் அம்பலமாகியுள்ளது.
மத வழிபாட்டுத் தலங்களுக்கு என்று கூறி இறக்குமதி செய்யப்பட்ட 158 வாகனங்களின் உரிம நிபந்தனைகளை அதே அதிகாரிகள் மீறியிருப்பதும் அதன்போது தெரியவந்துள்ளது.
அத்தோடு, 120 வாகனங்களின் உற்பத்தி ஆண்டு மாற்றப்பட்டதற்கான ஆதாரங்கள்வெளியாகியுள்ளதோடு, அதனை விசாரித்த கோபா குழு, அரவிந்த செனரத் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி விசாரணையை நடத்தியது.
ஒழுங்காற்று விசாரணை
கூட்டத்தில் பேசிய மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் ஜெனரல் நிஷாந்த வீரசிங்க, இந்த மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகளில் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை வெளியிடப்பட்டு, ஒழுங்காற்று விசாரணை நடத்தப்பட்டதாகவும், ஆனால் உண்மைகளை சரிபார்க்க முடியாததால், அந்த நபர் விடுவிக்கப்பட்டு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி, ஆதாரம் இல்லை என்று கூறி அதிகாரியை விடுவித்தது மிகவும் தவறான முன்னுதாரணம் என்றும் இதுபோன்ற மோசடிகளைச் செய்யும் அதிகாரிகளை விடுவிப்பது நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதி குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த முறைமை சிக்கலானது என்றும், இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு நீண்ட காலமாகத் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தத் துறையில் உள்ள முறையான பிரச்சினைகளைத் தீர்க்க தாங்கள் தொடர்ந்து முயற்சித்து வந்தாலும், நீண்டகால சீர்திருத்தங்கள் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 மணி நேரம் முன்
