மோசடியில் சிக்கிய சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர்: திடீரென வைத்தியசாலையில் அனுமதி
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த திடீரென சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விசாரணைகளில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு எதிராக இருவர் சாட்சியமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
விசாரணை
அத்தோடு, தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பலர் தற்போது காவலில் இருப்பதோடு ஒன்பது பேருக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தவிடமும் விசாரணைகள் மேற்கொள்ளவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |