வடக்கு - கிழக்கு வளர்ச்சியை கேள்விக்குறியாக்கிய அநுர தரப்பின் வரவு செலவு திட்டம்
அடுத்த ஆண்டுக்கான(2026) வரவு செலவு திட்டத்தில், நேர்மறையான முன்மொழிவுகள் இருந்த பொழுதிலும், வடக்கு மற்றும் கிழக்கு வளர்ச்சி தொடர்பான பல கவலைகளைக் கொண்டுள்ளது என கதிரவேலு சண்முகம் குகதாசன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மேம்பாட்டிற்காக பெயரிடப்பட்ட எந்தவொரு விரிவான கொள்கையோ அல்லது சிறப்பு ஒதுக்கீட்டு நிதியோ இந்தப் பாதீட்டில் இல்லை.
பிராந்திய உத்தி நிலை
ஒருங்கிணைந்த, பிராந்திய-குறிப்பிட்ட உத்திக்கு பதிலாக தேசிய துறை அமைச்சகங்கள் மூலம் வளர்ச்சி ஏமாற்றப் படுவதாகத் தெரிகிறது.

மேலும் கடற்றொழில் துறைமுகங்களின் மேம்பாட்டிற்காக’ இப் பாதீட்டில் தேசிய அளவில் கூடுதலாக 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு மேற்கொள்ளப் பட்டுள்ளது.
அத்தோடு வாழைச்சேனை துறைமுகத்தின் மேம்பாட்டுக்காக 350 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பருத்தித் துறை, வடமராட்சி, முல்லைத்தீவு, திருகோணமலை முதலிய மீன்பிடித் துறைமுகங்கள் எதுவும் மேம்பாட்டுக்காகப் பெயரிடப் படவில்லை.
அத்தோடு, வடக்குப் பொருளாதாரத்திற்கு இன்றியமையாத வெங்காயம், மிளகாய் மற்றும் திராட்சை முதலிய பயிர்களுக்கான மதிப்புச் சங்கிலிகளை மேம்படுத்துவதில் குறிப்பிட்ட கவனம் செலுத்தப்பட இல்லை.
மேலும், தற்போதுள்ள முதலீட்டு வலயங்களுக்கு துணை சேவை மண்டலங்களை உருவாக்குவது குறித்து பாதீடு விவாதிக்கிறது
எனினும் வடக்கு அல்லது கிழக்கில் முதலீட்டை ஈர்ப்பதற்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் புதிய தொழில்துறை அல்லது பொருளாதார வலயங்களை நிறுவுவதற்கான வெளிப்படையான திட்டம் எதுவும் பாதீட்டில் இல்லை” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |