உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்ட 20 ரயில் சேவைகள்!
Corona
People
SriLanka
Stop
Srilanka Railway
By Chanakyan
நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள காரணத்தினால் இரவு அஞ்சல் ரயில் உட்பட 20 ரயில் சேவைகள் இன்று முதல் ரத்து செய்யப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டினை மோசமான நிலைக்கு கொண்டு செல்லமால் மக்களைப் பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் குறைந்தது ஒருவார காலமாவது நாட்டை முடக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்