சட்டவிரோதமாக சுரண்டப்படும் கிழக்கின் இயற்கை வளங்கள்! (படங்கள்)
மோட்டார் சைக்கிள்களிலும் மாட்டு வண்டிகள் மூலமாகவும் உரப்பைகளில் சட்டவிரோதமான முறையில் கடற்கரை மண் கடத்தப்படுகிற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்த சட்டவிரோத செயற்பாடானது பெரியநீலாவணை, பாண்டிருப்பு, மருதமுனை ,கல்முனை ,சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் போன்ற பகுதிகளில் பரவலாக இடம்பெற்று வருகின்றது.
இரவு வேளைகளில் வரும் இனந்தெரியாத சிலர் இலக்கத்தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் அதிகளவான மணல்களை உரப்பையில் சட்டவிரோதமாக அள்ளிச்செல்கின்ற செயற்பாடு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
சட்டவிரோத செயற்பாடுகள்
இரவு வேளைகளில் இடம்பெறும் ரோந்து சேவைகள் தற்போது நிறுத்தப்பட்டிருப்பதனால் இந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி கடத்தல்காரர்கள் சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் காவல்துறையினர், இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து கரையோரப் பகுதிகளையும், கரையோர மூலவளங்களையும் பாதுகாத்துவந்தன.
பாரிய மண்ணரிப்புகள்
முகாமை திணைக்கள உத்தியோகத்தர்களும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.

இருப்பினும் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவரணை முதல் நிந்தவூர் வரையான கடற்கரையோரங்களில் சட்டவிரோதமாக மண்கடத்தல் இடம்பெறுவதனால் பாரிய மண்ணரிப்புகளும் இப்பகுதிகளில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பித்தக்கது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்