பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகரிக்கிறது கொடுப்பனவு : கிடைத்தது அனுமதி
Ministry of Education
A D Susil Premajayantha
By Sumithiran
7 months ago
பல்கலைக்கழக மாணவர்களின் மகாபொல(mahpola)மற்றும் உதவித்தொகை ( bursaries ) கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2015 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மகாபொல மற்றும் உதவித்தொகை கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை.
சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுத் தீர்மானம்
மேற்படி கொடுப்பனவுகளை மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கல்வி அமைச்சர் மற்றும் வர்த்தக, வாணிப மற்றும் உணவு அமைச்சர் சமர்ப்பித்த கூட்டுத் தீர்மானம் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்
இந்த முன்மொழிவை கருத்தில் கொண்டு, 2025 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை 7,500 ரூபாவாகவும், உதவித்தொகை கொடுப்பனவை 6,500 ரூபாவாகவும் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி