பெறுமதி சேர் வரி அதிகரிப்பு – மின்சார கட்டணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாது : ரஞ்சித் சியம்பலாபிட்டிய
Ranjith Siyambalapitiya
By Beulah
வரி வலையமைப்பை முழுமையாக நெறிப்படுத்தியவுடன் அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையி்ல்,
பெறுமதி சேர் வரி
“உலக வங்கி உடன்படிக்கைகளுக்கு அமைவாக வருவாயை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஜனவரி மாதம் பெறுமதி சேர் வரியை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் இது ஒரு தற்காலிக நடவடிக்கை மாத்திரமே ஆகும்.
பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்ட போதிலும், அது மின்சாரக் கட்டணங்கள் உட்பட சில துறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்