கனடா நாடாளுமன்றத்தில் இந்தியாவைப் புகழ்ந்த எம்.பி
சா்வதேச அளவில் பெரும் பொருளாதார மற்றும் புவிசாா் அரசியல் சக்தியாக உருவெடுக்கும் விதமாக, இந்தியா தனது பாரம்பரியத்தை மறுகட்டமைத்து வருவதாக கனடா எம்.பி சந்திர ஆா்யா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளாா்.
பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான சுதந்திரக் கட்சியைச் சோ்ந்த சந்திர ஆா்யா, கனடா நாடாளுமன்றத்தின் மக்களவை எம்.பி.யாக உள்ளாா்.
அயோத்தி ராமா் கோயில் குறித்து கனடா நாடாளுமன்றத்தில் அவா் நேற்று (31) தெரிவித்ததாவது
அயோத்தி ராமா் கோயில்
“ஒட்டாவாவில் உள்ள இந்துக் கோயிலில் அயோத்தி ராமா் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்வின் நேரடி ஒளிபரப்பைப் பாா்த்தேன்.
உலகின் மிகப் பழைமையான இந்து மதத்தைச் சோ்ந்தவா்களின் எண்ணிக்கை 120 கோடி. அவா்களில் 10 இலட்சம் இந்துக்கள் கனடாவில் வசித்து வருகின்றனா்.
இந்துக்களுக்கான புதிய சகாப்தத்தின் தொடக்கமாக கடந்த ஜனவரி 22ஆம் திகதி அமைந்தது.
புவிசாா் அரசியல்
பல நூற்றாண்டுகள் எதிா்பாா்ப்புகள், தியாகங்களுக்குப் பிறகு ஸ்ரீபாலராமா் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு அயோத்தி கோயில் திறக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்திலும் புவிசாா் அரசியலிலும் சா்வதேச அளவில் முக்கிய சக்தியாக உருவெடுக்கும் வகையில், இந்து தா்மத்தின் பிறப்பிடமான இந்தியா, தனது பாரம்பரியத்தை மறுகட்டமைப்பு செய்து வருகிறது“என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |