எந்த நேரத்திலும் இந்தியா தயாராகவே இருக்கிறது! இலங்கைக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி
India
Sri Lanka
Train service
Pavithra Vanniyarachchi
By Ajith
இலங்கையின் தொடருந்து சேவையை மேம்படுத்த இந்தியா எந்த நேரத்திலும் தயாராகவே உள்ளது என்று இந்திய உயா்ஸ்தானிகர் தொிவித்துள்ளாா்.
இலங்கையின் போக்குவரத்துத்துறை அமைச்சா் பவித்ரா வன்னியாராச்சியுடன் (Pavithra Vanniyarachchi) இன்று உயா்ஸ்தானிகா் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இலங்கையின் தொடரூந்து சேவை மற்றும் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவது தொடா்பில் நீண்டக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது இலங்கையில் உள்ள தொடரூந்து ஓட்டுநா்களுக்கு பயிற்சியளிக்க இந்திய உயா்ஸ்தானிகா் இணக்கம் வெளியிட்டுள்ளாா்.