மகிந்தவின் அறிவிப்பால் கடும் அதிருப்தியில் இந்தியா
கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பில் இந்திய இலங்கை உறவுகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இலங்கை துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியா ஜப்பானுடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் உடன்படிக்கையை முன்னெடுக்கப்போவதில்லை எனபிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்றையதினம் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு வாக்குறுதி அளித்துள்ளதை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அரசாங்கம் தனது கடும் அதிருப்தியை இலங்கையின் உயர்மட்ட தலைவர்களிடம் விரைவில் தெரிவிக்கும் என புதுடில்லி வட்டாரங்கள் குறிப்பிட்டன என அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்தியா, இலங்கையில் தனது நலன்களை பேணுவதற்கு விரும்புகின்ற,இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்காக முக்கிய திட்டங்களுக்கு நிதி வழங்க தயாராக இருக்கின்ற வேளையில் இலங்கை 2019 உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என தெரிவித்திருப்பதற்கு இந்தியா கடும்வினையாற்றும் என புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.