மோடியின் அமெரிக்க பயணம் - பிரம்மாண்டமான சிறப்பு ஏற்பாடுகள்!
Joe Biden
Narendra Modi
United States of America
India
By Pakirathan
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.
அமெரிக்கா வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோர் சிறப்பான வரவேற்பு வழங்கியிருந்தனர்.
தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அரச விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார்.
பிரம்மாண்ட வரவேற்பு
இதனைடையே இந்திய பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையை முன்னிட்டு அவரை வரவேற்கும் விதமாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அந்த வகையில், மேன்ஹாட்டனில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடம், நியூயோர்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடம் ஆகியவற்றில் மூவர்ண ஒளி படரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற நயாகரா அருவியானது இந்திய தேசிய கொடியின் மூவர்ணத்தில் ஒளிர்ந்தது.
