ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியா எடுக்க போகும் முடிவு: எச்சரிக்கும் சிறீதரன்!
இந்தியா (India) தமிழர்கள் விடயத்தில் ஒரு சரியான முடிவை எடுக்க தவறும் பட்சத்தில் இது ஈழத்தமிழர்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும் என முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தமிழரசுக் கட்சி மக்களுடைய கட்சி எனவே அதனை வழிநடத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்குண்டு.
அரசியலில் சூழ்ச்சியும் தந்திரமும் எவ்வாறெல்லாம் இருக்கும் என்பதை நான் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கண்டுகொண்டேன்.
என்னையும் என் அரசியல் வாழ்க்கையையும் இல்லாதொழிக்க பல சதித்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
எல்லோருமே சிங்கள தலைவர்கள் தான், அநுர மட்டும் இதற்கு விதி விலக்காக இருக்க முடியாது.
மக்களின் ஆணையோடு நான் மீண்டும் வந்து என்னுடைய பணியை மக்களுக்காக ஆற்றுவேன். மற்றவர்கள் ஏமாற்றியது போல இவர்களும் ஏமாற்றத்தான் போகிறார்கள்” என்றார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |