இந்தியாவிடமிருந்து இதுவரை வராத எதிர்ப்பு - வெளியான தகவல்
முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொடவை இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக நியமிக்க இந்தியா எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் உதய கம்மன்பில இது தொடர்பில் கூறுகையில், புதுடெல்லி எழுப்பிய ஆட்சேபனைகள் குறித்து அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவில்லை. மொறகொட விரைவில் இந்தியாவில் கடமைகளை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிலிந்த மொறகொட உட்பட இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த எட்டு புதிய தூதுவர்களை நியமிக்க கடந்த செப்ரெம்பரில் நாடாளுமன்ற உயர் பதவிகள் குழு ஒப்புதல் அளித்தது.
மொறகொட அமைச்சரவை அந்தஸ்துள்ள தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார், அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நேரடியாக பதிலளிப்பார்.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி மொகான் பீரிஸ், சீனாவுக்கான தூதுவர் டாக்டர் பாலித கோஹன, ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி சி.ஏ. சந்திரபிரேமா,ஜப்பானுக்கான தூதுவர் சஜீவ் குணசேகர மற்றும் அமெரிக்காவுக்கான இலங்கையின் புதிய தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டவர்களாவார்.
புதிய தூதுவர்கள் அனைவரும் அந்தந்த நாடுகளில் கடமைகளை ஏற்றுக்கொண்டனர், ஆனால் மொறகொட இதுவரை புதுடெல்லிக்கு செல்லவில்லை.