விமானத்தில் கொடூர தாக்குதல்: அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்தியர்
அமெரிக்காவில் (United States) இந்திய (India) இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து சென்ற விமானத்தில் இருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பிரணீத் குமார் உசிரிபள்ளி என்ற 28 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அலுவலகம் அறிக்கை
இது தொடர்பில் மாசசூசெட்ஸ் மாகாண வழக்கறிஞர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சிகாகோவிலிருந்து ஜெர்மனிக்குச் செல்லும் விமானத்தில், பிரணீத் குமார் உசிரிபள்ளி 28, என்ற இந்தியர் பயணித்தார். இவர், பயணத்தின்போது சக பயணியான 17 வயது இளைஞரின் தோளில் முள்கரண்டியால் குத்தினார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
அதே வயதுடைய மற்றுமொரு இளைஞரின் தலையில் பின்புறத்திலும் குத்தியுள்ளார்.

அத்துடன், விமான ஊழியர் ஒருவரை அறைய முயன்றதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாஸ்டனில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சிறைத்தண்டனை
குறித்த இளைஞர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 250,000 அமெரிக்க டொலர் வரை அபராதம் விதிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்திய இளைஞருக்கு தற்போது சட்டப்பூர்வ குடியேற்ற அந்தஸ்து இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், அவர் இதற்கு முன்பு அமெரிக்காவில் மாணவர் விசாவில் தங்கியிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்