கீரிமலையில் இந்திய நிதியில் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களிடம் ஒப்படைப்பு

Sri Lanka India
By Theepan Jun 02, 2026 11:48 AM GMT
Report

வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வளாகத்தில் இந்திய அரசாங்கத்தின் விசேட நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகக் கையளிக்கும் நிகழ்வு இன்று (02.06.2026)  காலை நடைபெற்றது.

இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வுகளின் பின்னர் அதிதிகள் ஆலய வழிபாடுகளில் பக்திபூர்வமாக ஈடுபட்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகன் மேலும் குறிப்பிடுகையில்,

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு : உயர் நீதிமன்றின் உத்தரவு

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு : உயர் நீதிமன்றின் உத்தரவு

மருதப்புரவல்லி இளவரசி,

'வரலாற்று ஆய்வாளர்களும், சுற்றுலாவிகளும் பெருமளவில் வருகைதரும் புகழ்பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க நகுலேஸ்வரம் ஆலயம் இங்கு அமைந்துள்ளது.

கீரிமலையில் இந்திய நிதியில் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களிடம் ஒப்படைப்பு | Indian Funded Water Treatment Plant In Keerimalai

இந்தியாவிலிருந்து வந்த மருதப்புரவல்லி இளவரசி, இங்குள்ள புனித தீர்த்தத்தில் (கீரிமலை ஊற்று) நீராடி தன் குறை நீங்கி, மாவிட்டபுரம் ஆலயத்தை எழுப்பி வழிபாட்டை நிலைநிறுத்தினார் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

இத்தகைய மிக நீண்ட பண்டைய வரலாற்றையும் புகழ்பெற்ற புனித தீர்த்தத்தையும் கொண்ட இந்த ஆலயத்துக்குக் கடந்த 2015ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்த போது வருகை தந்திருந்தார்.

இந்திய அரசு வடமாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் ஏனைய வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் தொடர்ந்து தனது ஆதரவை வழங்கி வருகின்றது.

வடமாகாணத்தில் உள்ள மிகவும் நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கப்பட்ட இந்திய வீட்டு வசதித் திட்டத்தை நாம் எப்போதும் நன்றியோடு நினைவுகூர்வோம். இதன் மூலம் இன்று பல குடும்பங்கள் நல்ல உறுதியான வீடுகளில் பாதுகாப்பாக வாழ முடிகின்றன.

அமெரிக்காவின் அன்பளிப்பு இலங்கையை வந்தடைந்த உலங்குவானூர்திகள்

அமெரிக்காவின் அன்பளிப்பு இலங்கையை வந்தடைந்த உலங்குவானூர்திகள்

மேம்பாட்டுத் திட்டம்

இந்திய அரசின் இந்த மகத்தான பங்களிப்பை வடபகுதி மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். இதுமட்டுமன்றி, தொடருந்து மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மன்னார் மருத்துவமனை மேம்பாட்டுத் திட்டம் போன்ற பல திட்டங்கள் இந்தியாவின் பங்களிப்போடு நடந்துள்ளன.

கீரிமலையில் இந்திய நிதியில் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களிடம் ஒப்படைப்பு | Indian Funded Water Treatment Plant In Keerimalai

மேலும் சில மருத்துவமனைத் திட்டங்கள் தற்பொழுது பரிசீலனையில் உள்ளன. கடல் அலைகளுக்கு மிக அருகில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகுலேஸ்வரம் ஆலயத்தின் குடிநீர்த் தேவைக்கு உங்களது ஆதரவு மற்றும் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டுக்குரியது.

இந்த வரலாற்றுப் பூமியின் மேம்பாட்டுக்காக உதவும் இந்தியாவுக்கு, வடமாகாண மக்கள் சார்பாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கும், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்காவில் சிக்கிய சீன வர்த்தகர்கள்

கட்டுநாயக்காவில் சிக்கிய சீன வர்த்தகர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026