கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பல்
Port of Colombo
Sri Lanka
Sri Lanka Navy
Indian Navy
By Sathangani
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SATPURA’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக குறித்த கப்பல் நேற்று (20) நாட்டிற்கு வந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய இந்திய கப்பலுக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
403 பணியாளர்களைக் கொண்டுள்ளது
நாட்டை வந்தடைந்த போர்க் கப்பலான ‘INS SATPURA’ 142.5 மீற்றர் நீளம் கொண்டது மற்றும் 403 பணியாளர்களைக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கப்பல் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் காலத்தில் அதன் பணியாளர்களை இலங்கையின் முக்கியமான இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்