ஜோ பைடனுக்கு பதில் இந்திய வம்சாவளி பெண்: தடம் மாறும் அமெரிக்க தேர்தல் களம்
அமெரிக்க அதிபா் தோ்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை (Joe Biden) விட, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தான் (Kamala Harris) முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை (Donald Trump) எதிா்த்துப் போட்டியிடுவதற்குத் தகுதியானவா் என தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற கருத்து கணிப்பொன்றின் மூலம் இது தெரியவந்துள்ளது.
இதன் படி, அவரது ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த பெரும்பாலானவர்களும் இந்த விடயத்தையே கருதுவதாகவும் கருத்து கணிப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
ஜனாபதி பதவி
இந்த நிலையில், மக்கள் கருத்தாய்வு நிறுவனமான ‘ஏபி-என்ஓஆா்’ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில், ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினா்களில் 6 போ் பைடனைவிட கமலா ஹாரிஸ்தான் ஜனாபதி பதவிக்குப் பொருத்தமானவா் என்று கருதியுள்ளனர்.
இதேவேளை, பைடனின் வயது மூப்பு காரணமாகவும் ட்ரம்புக்கு எதிரான நேரடி விவாத்தின்போது தடுமாறியதாலும் ஜனாதிபதி தோ்தலில் இருந்து விலக வேண்டும் என ஜனநாயகக் கட்சிக்குள் குரல்கள் வலுத்துவரும் சூழலில் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |