மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது
மறைந்த நடிகரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்திற்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருது அறிவித்துள்ளது.
இந்திய மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கலைத்துறையில் சிறந்த சேவை செய்ததற்காக விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய விருதுகள்
மேலும், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு பத்ம விபூஷண் விருதும், தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவிக்கு பத்ம பூஷண் விருதும், நடன கலைஞர் வைஜெயந்தி மாலாவிற்கு பத்ம விபூஷண் விருதும், பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷண் விருதும் வழங்கப்படுகின்றன.
கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் சிக்சை எடுத்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 28ஆம் திகதி காலை 6.10 மணிக்கு காலமானார்.
விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்
டிசம்பர் 29ஆம் திகதி மாலையில் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினார். மேலும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு பலரும் சென்று தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |