இந்திய நாடாளுமன்ற தேர்தல்: 3ஆம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்
இந்தியாவில்(India) இன்று(7) மூன்றாம் கட்ட வாக்குபதிவுகள் ஆரம்பமாகியுள்ளது.
இந்தியாவில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது.
இதில் முதல்கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தல்
இந்த தேர்தலில் தமிழ்நாடு(Tamil Nadu), புதுச்சேரியின்(Puducherry) 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்து விட்டது.
அடுத்ததாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.
இதில் கேரளாவின்(Kerala) மொத்தமுள்ள 20 தொகுதிகளும், கர்நாடகாவின் 14 தொகுதிகளும் முக்கியமானவையாக கருதப்படுகின்றது.
3ம் கட்ட வாக்குப்பதிவு
இதைத் தொடர்ந்து, உத்தரபிரதேசம்(Uttar Pradesh), குஜராத்(Gujarat), பீகார்( Bihar), அசாம்(Assam), சத்தீஸ்கர்(Chhattisgarh), கோவை(Coimbatore), மகாராஷ்டிரா(Maharashtra), கர்நாடகா(Karnataka) உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது.
வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi), மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா(Amit Shah) ஆகியோர் குஜராத்தில் வாக்களித்துள்ளனர்.
#WATCH | Prime Minister Narendra Modi casts his vote for #LokSabhaElections2024 at Nishan Higher Secondary School in Ahmedabad, Gujarat pic.twitter.com/i057pygTkJ
— ANI (@ANI) May 7, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |