அதானி மின்திட்ட சர்ச்சைகள்..! இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இலங்கைக்கான விஜயமொன்றை அடுத்த மாத முற்பகுதியில் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு (Colombo) வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, 6 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ( Anurakumara Dissanayake) , பிரதமர் ஹரிணி உட்பட்டோரை சந்திக்கவுள்ள இந்திய பிரதமர், சம்பூருக்கு உலங்குவானூர்தியில் சென்று மின்திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
விசேட பாதுகாப்பு ஏற்பாடு
அதேபோல அனுராதபுரம் ஸ்ரீ மகாபோதிக்கு சென்று வழிபாடுகளிலும் அவர் ஈடுபடவுள்ளார்.
இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தையொட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள இந்தியாவிலிருந்து உயர்மட்ட பாதுகாப்பு குழுவொன்று தற்போது கொழும்பு வந்துள்ளது.
முன்னதாக அதானி மின்திட்டம் தொடர்பில் இலங்கையில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் பிரதமர் மோடியின் விஜயத்தின் போது அது தொடர்பில் முக்கியமாக ஆராயப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
