அரசாங்க உறுப்பினர்களுக்கு மறைமுக சலுகை! முஜிபுர் குற்றச்சாட்டு
மக்களுக்குப் பொருளாதாரப் பலன்களை வழங்குவதாகப் பொய் கூறிக்கொண்டே, அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் சலுகைகளை வழங்கி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
இது குறித்து கட்சி செயற்குழு கூட்டத்தில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“பொருளாதார ஜனநாயகம் நிறுவப்பட்டு, மக்களுக்குப் பலன்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் லால்காந்தா கூறுகிறார்.
லால்காந்தா சொன்ன பலன்கள்
லால்காந்தா சொன்ன பலன்களை மக்கள் பெறவில்லை. லால்காந்தாக்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். முன்பெல்லாம் ஒரு மூட்டை உரத்தின் விலை எட்டு அல்லது பத்தாயிரம் ரூபாயாக இருந்தது.

இப்போது அது பதினேழு அல்லது பதினெட்டாயிரம் ரூபாயாக இருக்கிறது. முன்தினம் நான் லல்கந்தாவின் வீட்டைப் பார்த்தேன்.
அவர் பொருளாதாரப் பலன்களைப் பெற்றிருக்கிறார். வசந்த சமரசிங்க இப்போது விஜய குமாரதுங்கவைப் போல அழகாகிவிட்டார். முன்பு பழுப்பாக இருந்த நமல் கருணாரத்ன, வெளுத்துவிட்டார். அவர்கள் தற்போது அரசாங்கத்திடம் இருந்து பொருளாதாரப் பலன்களைப் பெற்றிருக்கிறார்கள்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |