உளவுத்துறையை கடந்து சிறீதரனை இலக்குவைத்த சுமந்திரனின் முக்கிய செய்தி
இலங்கை தமிழர் விவகாரம் தமிழ்நாட்டில் உணர்ச்சி மற்றும் அரசியல் ரீதியாக முக்கியமானது. தி.மு.க பாரம்பரியமாகவே இலங்கை தமிழர் உரிமைகள் குறித்த நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகிறது.
அதனால், முதல்வராக ஸ்டாலின் இந்த விவகாரத்தை இந்திய பிரதமரிடம் எடுத்துச் சொல்லுவது ஒரு தொடர்ச்சியான அரசியல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இதன் பின்னணியிலேயே அயலக தமிழர் மாநாட்டில் ஒரு மையப்புள்ளியில் உலகத்தமிழர்கள் கூடி நின்ற சந்தர்பத்துக்கு முன்னதாக இலங்கை தமிழர்கள் தொடர்பான முக்கிய கடிதம் ஸ்டாலினால் மோடிக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த நிகழ்வுக்கு செல்லவிருந்த சிவஞானம் சிறீதரனை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு-குடியகல்வு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருந்ததாகவும், இதில் அரசியல் ரீதியாக காணப்படும் போட்டி நிலையே பின்னணி காரணம் என்றும் குற்றம் சுமத்தப்படுகிறது.
இந்நிலையில் சிறீதரனின் பயணம் தடைப்பட்டதற்கு இலங்கை அரசாங்க தரப்பில் இருந்து எந்தவித விளக்கங்களும் இதுவரை வெளிவராத பின்னணியில் இதற்கு சுமந்திரன் கூறிய கருத்து தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் மூலம் தொடரும் காணொளியில் வெளிப்படுத்தப்பட்டது....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |