வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
srilanka
abroad
omicron
By Sumithiran
வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் சந்திம ஜீவேந்திர தெரிவித்தாா்.
கொழும்பில் இன்று அரச தலைவரின் ஊடக பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளா் சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டாா்.
இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனைகளின் எவருக்கும் ஒமிக்ரோன் தொற்று உறுதியாகவில்லை. தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பரிசோதனைகளின் அறிக்கையை எதிர்வரும் இரு தினங்களில் சமர்ப்பிக்க எதிர்பாத்துள்ளோம் எனத் தெரிவித்தார்..
அதேவேளை நாட்டை மூடுவது ஒமிக்ரானை ஒழிப்பதற்கான மாற்று நடவடிக்கை
அல்லவென சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் எஸ்.எச்.முனசிங்க தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்