பால் மா விலை குறைப்பு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை குறைப்பது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ கூட்டம் இதுவரையில் நடத்தப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மார்ச் மாதத்தில் ஒரு கிலோ பால் மாவின் விலை 150 ரூபாவாலும், 400 கிராம் பால் மாவின் விலை 60 ரூபாவாலும் இறக்குமதியாளர்கள் குறைத்தனர்.
நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி
விலை குறைப்பை தொடர்ந்து, இறக்குமதி செய்யப்பட்ட பால் மா உள்ளூர் சந்தையில் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், இன்று (25) முதல் மீண்டும் விலையை குறைப்பதற்கு நியூசிலாந்தில் இருந்து பால் மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் நேற்று (24) தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ பால் மாவின் விலை 250 ரூபாவாலும், 400 கிராம் பால் மாவின் விலை 100 முதல் 140 ரூபாவாலும் குறைக்கப்படும் என்று கூறப்பட்டது.
எனினும், மேற்படி அறிக்கையுடன் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை” என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...... |