இந்திய புலனாய்வுப்பிரிவு இலங்கைக்கு அனுப்பிய அவசர தகவல் - சிக்கினர் இருவர்
இந்திய சுங்கப் புலனாய்வுப் பிரிவினர் இலங்கையின் சுங்கப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருந்தொகை சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 110 மில்லியன் ரூபா என சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கைக்கு ஏற்படவிருந்த பாரிய இழப்பு
கொழும்பு துறைமுகத்திலிருந்து சிகரெட் கையிருப்பு விடுவிக்கப்பட்டிருந்தால் இலங்கைக்கு 316 மில்லியன் ரூபா சுங்க வருமான இழப்பு ஏற்பட்டிருக்கும் என சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று (11) பிற்பகல் கொழும்பு கிரான்ட்பாஸ், கிரேலைன் கொள்கலன் முற்றத்தில் இந்த சிகரெட் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கொள்கலன் கடந்த 7ஆம் திகதி இந்தியாவின் கட்டுப்பள்ள துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது.
அப்படி எதுவும் இல்லை
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த இறக்குமதியாளர் ஒருவர், கொள்கலனில் 100% பருத்தி துணி மற்றும் பிளாஸ்டிக் பொத்தான்கள் இருந்ததாக சுங்க அதிகாரிகளிடம் தெரிவித்திருந்த போதும், அந்த கொள்கலனில் அப்படி எதுவும் இல்லை என சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த சட்டவிரோத இறக்குமதி தொடர்பில், இந்தக் கொள்கலனை விடுவிக்க வந்த இருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுங்கப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
YOU MAY LIKE THIS