2017இல் வௌவாலிடம் கடி வாங்கிய வுகான் விஞ்ஞானி - தற்போது வெளியாகும் தகவல்
கொரோனா வைரஸ் செயற்கையாக உருவானதா? அல்லது இயற்கையாக உருவானதா? என்பது குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் சீனாவின் வுகான் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் ஒன்றான சீனா - வுகான் நகரில் உள்ள ஒரு குகையில் கடந்த 2017-ம் ஆண்டு வுகான் வைராலஜி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த விஞ்ஞானி வௌவாலிடம் கடி வாங்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், வுகான் வைராலஜி நிறுவனத்தில் பணியாற்றிவரும் சீனாவில் ’வௌவால் பெண்மணி’ என்று அழைக்கப்படும் ஷிங் ஷன்லி தனது குழுவுடன் வுகானில் உள்ள ஒரு குகைப்பகுதிக்கு 2017-ம் ஆண்டு சென்றுள்ளார்.
சார்ஸ் வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிக்காக அவர்கள் வௌவாலை பிடித்து அதில் பரிசோதனை செய்துள்ளனர். அந்த குழுவில் இடம்பெற்றிருந்த வைரஸ் ஆராய்ச்சிளர் சியூ ஜியி என்ற அந்த குகையில் பிடித்த ஒரு வௌவாலில் இருந்து பரிசோதனை மாதிரிகளை எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது சியூ ஜியி தனது கையில் பிடித்து வைத்திருந்த வௌவால் அவரை கடித்துள்ளது. கையுறை அணிந்திருந்த போதும் வௌவாலின் அந்த கடி ‘ஊசி குத்தியது’ போல இருந்தது என அவர் கூறியுள்ளார். வௌவால் கடித்ததையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சிக்கு சென்றபோது அந்த குழுவினர் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உடை அணியவில்லை. சாதாரண உடை மற்றும் கையுறை மட்டுமே அணிந்து சென்றுள்ளனர்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.