யாழில் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த குழந்தை : தாய் அளித்துள்ள வாக்குமூலம்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Aug 05, 2024 07:44 AM GMT
Report

குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடித்ததால் குழந்தையின் கைகால்களை திருகியதாக யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த ஆண் குழந்தையின் தாயார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் சசிரூபன் நிகாஸ் என்ற பிறந்து 45 நாளான குழந்தையானது தாய் பால் ஊட்டிய சில மணி நேரங்களுக்கு பின்னர் மயக்கமுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் : மின்னல் வேக பெண்ணால் சிறிய தீவிற்கு கிடைத்த தங்கப் பதக்கம்

பாரிஸ் ஒலிம்பிக் : மின்னல் வேக பெண்ணால் சிறிய தீவிற்கு கிடைத்த தங்கப் பதக்கம்

மரண விசாரணை

குழந்தையின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையில் மரண விசாரணையை வலிகாமம் கிழக்கு பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

யாழில் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த குழந்தை : தாய் அளித்துள்ள வாக்குமூலம் | Inquest Into The Death Of Boy Baby Died In Jaffna

குழந்தையின் உடலில் காயங்கள் மற்றும் தளும்புகள் காணப்படுவதன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடல் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

குழந்தையின் கை கால் முறிக்கப்பட்டிருந்த நிலையில் தலையில் தாக்கப்பட்டு குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஷான் திலகரத்ன தம்பதி

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஷான் திலகரத்ன தம்பதி

உயிரிழந்த சம்பவம் 

இந்நிலையில், குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் தெல்லிப்பழை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த வசாரணையின் போது குழந்தை பால் குடிக்க மறுப்பதால் கைகள் கால்களை திருகினேன் ஆனால் எனது குழந்தையை நான் கொலை செய்யவில்லை என தயார் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த குழந்தை : தாய் அளித்துள்ள வாக்குமூலம் | Inquest Into The Death Of Boy Baby Died In Jaffna

அத்தோடு, குழந்தையின் தந்தையையும்  மற்றும் குழந்தையை பராமரிக்க வீட்டிற்கு வந்து சென்ற பெண்ணொருவரையும் வைத்து விசரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் , குழந்தையின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர்  நீதிமன்ற உத்தரவின் பேரில் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷில் மீண்டும் வெடித்த வன்முறை...! 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிப்பு

பங்களாதேஷில் மீண்டும் வெடித்த வன்முறை...! 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP  இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025