திருகோணமலையில் நங்கூரமிட்டது இந்திய கடற்படை கப்பல்
இந்திய கடற்படைக் கப்பலான (INS) ‘பட்டி மால்வ்’ இன்று காலை (16 மே 2023) உத்தியோகபூர்வ விஜயமாக திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.
வருகை தந்த கப்பலை சிறிலங்கா கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
ஐஎன்எஸ் ‘பட்டி மால்வ்’ என்பது 46 மீற்றர் நீளமுள்ள கப்பலாகும், இதில் 101 பேர் கொண்ட பணியாளர்கள் உள்ளனர்.
பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
கப்பல் தங்கியிருக்கும் காலத்தில், இரு கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் நோக்கில், சிறிலங்கா கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பணியாளர்கள் பங்கேற்பார்கள்.
அவர்கள் திருகோணமலைக்கு சுற்றுலா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடவுப் பயிற்சி
தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, ‘பட்டி மால்வ்’ மே 17 ஆம் திகதி தீவைவிட்டு புறப்பட்டு, திருகோணமலைக்கு அப்பால் உள்ள சிறிலங்கா கடற்படையின் கப்பலுடன் கடவுப் பயிற்சியில் (பாசெக்ஸ்) ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.