லெஸ்டர் பல்கலைக்கழகத்துடன் NORTHERN UNI வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்!

By Pavi Nov 20, 2026 11:36 AM GMT
Report

யாழ்ப்பாண மாணவர்களுக்குப் புதிய சர்வதேச உயர்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில், பிரித்தானியாவின் புகழ்பெற்ற லெஸ்டர் பல்கலைக்கழகமும் (University of Leicester), NORTHERN UNI நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவுள்ளன.

இதற்கமைய, லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா, எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள NORTHERN UNI-க்கு நேரில் விஜயம் செய்து குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளார்.

இரு கல்வி நிறுவனங்களுக்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் முக்கிய அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக, பிரித்தானியாவிலுள்ள லெஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜாவுக்கும், NORTHERN UNI நிறுவனரும் தலைவருமான இந்திரகுமார் பத்மநாதனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் NORTHERN UNI இயக்குநர் ரம்பா இந்திரகுமாரும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது, இரு கல்வி நிறுவனங்களினதும் கல்வித் திறன்கள் மற்றும் எதிர்கால இலக்குகளை ஒருங்கிணைத்து புதிய கற்கைநெறிகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கணினி அறிவியல் பொறியியல் பட்டப்படிப்பு (BEng Computer Science with Artificial Intelligence) மற்றும் வணிகம் மற்றும் முகாமைத்துவ இளங்கலைப் பட்டப்படிப்பு (BBA in Business and Management) உள்ளிட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கற்கைநெறிகளை வழங்க இரு நிறுவனங்களும் இணைந்து செயற்படவுள்ளன.

இதன் மூலம் யாழ்ப்பாண மாணவர்கள் தமது சொந்த மண்ணிலிருந்தே சர்வதேச தரத்திலான உயர்கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய வாய்ப்பு உருவாகவுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மருத்துவக் கல்லூரி ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் விண்வெளி அறிவியல் துறையில் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் இரு கல்வி நிறுவனங்களும் ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Gallery

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ரங்கூன், Burma, ஏழாலை, London, United Kingdom

10 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026