'சினோஃபார்ம்' தடுப்பூசியை இலங்கையில் அனுமதிக்குமாறு சீனா கட்டாயப்படுத்தியது - சர்வதேச ஊடகம்
சீனாவின் கொரோனா தடுப்பூசியான சினோஃபார்ம் தடுப்பூசியை இலங்கையில் அனுமதிக்குமாறு, சீன அரசாங்கம் இலங்கையை வற்புறுத்தியதாக இந்தியாவின் த எக்கனமிக்ஸ் ரைம்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவினால் 5 லட்சம் அஸ்ட்ராசெனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
இதனை அடுத்து சீனா 3 லட்சம் சினோஃபார்ம் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்கவிருப்பதாக அறிவித்தது. எனினும், கொவிஷீல்ட் தடுப்பூசியை இலங்கையில் அவசர நிலைமையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள போதும், சினோஃபார்ம் தடுப்பூசிக்கு இதுவரையில் அவ்வாறான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில், சினோஃபார்ம் தடுப்பூசியை இலங்கையில் அனுமதிக்குமாறு சீனா அழுத்தம் கொடுத்திருப்பதாக இந்தியா ஊடகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் இதுவரையில் எவ்விதமான பதிலையும் வெளியிட்டிருக்கவில்லை.