சிறிலங்காவின் அறிவிப்பிற்கு சர்வதேச நாணயநிதியம் பாராட்டு!
கொள்கை வட்டிவீதங்களை அதிகரிக்கும் இலங்கையின் தீர்மானமானது, பணவீக்கத்தை குறைப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக சர்வதேச நாணயநிதியம் பாராட்டியுள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இலங்கை மத்திய வங்கி திட்டமிட்ட நடைமுறைக்கு ஏற்ப வட்டி விகிதங்களை அதிகரித்தமை பொருத்தமான விடயம் என சர்வதேச நாணய நிதியம் மேலும் கூறியுள்ளது.
வெளியிடப்பட்ட அறிக்கை

பணவீக்கம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் வேறுபாடு காணப்பட்டது, இருப்பினும் மத்திய வங்கி கொள்கை வட்டி வீதத்தை 1% ஆல் உயர்த்தியமை பாராட்டுவதற்குரியது என நாணயநிதியம் தெரிவித்துள்ளது.
பணவீக்க இலக்குகளை அடைவதில் இலங்கை மத்திய வங்கியின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது என இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 5 மணி நேரம் முன்