சர்வதேச பாடசாலையில் 17 மாணவர்களுக்கு கொரோனா
corona
student
international school
By Sumithiran
கொவிட் தொற்று அதிகரிப்பை அடுத்து மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் கட்டம் கட்டமாக திறக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சற்று தணிந்திருந்த கொவிட் தொற்று மீண்டும் அதிகரித்துச் செல்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது காலி – பெந்தொட்டையில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றில் 17 மாணவர்கள் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பாடசாலையில் 51 மாணவர்களுக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட குறித்த மாணவர்கள் அளுத்கம, பெந்தொட்டை, ஊரகஸ்மங்ஹந்திய மற்றும் கொஸ்கொட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என இனம் காணப்பட்டுள்ளனர்.