யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக ஆரம்பமான சர்வதேச வர்த்தக கண்காட்சி!
யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில், 15வது ஆண்டாக இடம்பெறும் யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் (24.01.2025) யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் காலை 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பல்வேறுபட்ட வழங்குனர்களால் 350க்கு மேற்பட்ட காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வர்த்தக கண்காட்சி
விவசாயம், தொழில்நுட்பம், விருந்தோம்பல், கல்வி, உணவு , நவநாகரிகம் மற்றும் இதர தொழிற்துறைகள் என பல்வேறுபட்ட வர்த்தக நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தி விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தொழிற்துறைகள் திணைக்களத்திற்கு, 40 வரையான நுண்ணிய சிறிய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்காக 10 காட்சிக் கூடங்கள் அமைப்பதற்கான இலவச இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியானது இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 25 மற்றும் 26 திகதிகளிலும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தக சந்தையில் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையின் நூற்றுக்கணக்கான தயாரிப்புகளை மலிவான விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் றீச்சா பண்ணையின் புதிய பொருட்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் மிகவும் குறுகிய காலத்தில் பெரு வளர்ச்சியை கண்டு உலகத்தமிழர்களின் பேராதரவை பெற்றுவரும் றீச்சா நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையில் நடைபெறும் மதிப்புமிக்க வணிக சர்வதேச விருதுகளுக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |