யாழில் ஊடகவியலாளருக்கு எதிராக பொய்யான முறைப்பாடு : சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Jaffna Sri Lanka Journalists In Sri Lanka
By Shalini Balachandran Jan 28, 2025 06:45 AM GMT
Report

யாழில் (Jaffna) ஊடகவியலாளர் மரியசீலன் திலெக்ஸ் என்பருக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணை நேற்று (28) காலை 11 மணியிலிருந்து 1:00 மணிவரை மருதங்கேணி காவல்நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த ஒரு சில தினங்களிற்கு முன்னர் வடமராட்சி கிழக்கு வத்திராயனை சேர்ந்த கடற்றொழிலாளி ஒருவர் கடலில் இடம் பெற்ற சம்பவம் ஒன்றின்போது காயமடைந்த நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அநுர அரசை எச்சரிக்கும் உதய கம்மன்பில

அநுர அரசை எச்சரிக்கும் உதய கம்மன்பில

பிரதேச வைத்தியசாலை

இந்தநிலையில், அந் நபரை பார்வையிடுவதற்காக மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு சென்று மருத்துவமனை உத்தியோகத்தர்களிடம் ஊடகவியலாளர்கள் அனுமதி கோரியுள்ளனர்.

யாழில் ஊடகவியலாளருக்கு எதிராக பொய்யான முறைப்பாடு : சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Investigation Against Journalist In Jaffna

மருத்துவமனை உத்தியோகத்தர்கள் பார்வை நேரத்திற்கு முன் விடுதியில் நோயாளர்களை பார்வையிட அனுமதிக்கப்படுவதில்லை என்றும் பொறுப்பு மருத்துவரின் அனுமதியை பெற்று காயமடைந்த நபரை பார்வையிடுமாறு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, ஊடகவியலாளர் மரியசீலன் திலெக்ஸ், சக ஊடகவியலாளர் ஒருவருடன் சென்று மருத்துவ மனை பொறுப்பு மருத்துவரிடம் அனுமதி கோரியுள்ளனர்.

கஜேந்திரகுமார் விடுத்த அழைப்பு : இறுதி நேரத்தில் காலை வாரிய தமிழரசு கட்சி!

கஜேந்திரகுமார் விடுத்த அழைப்பு : இறுதி நேரத்தில் காலை வாரிய தமிழரசு கட்சி!

பொறுப்பு மருத்துவர் 

இந்தநிலையில், பொறுப்பு மருத்துவர் ஊடகவியலாளர்களை பார்வை நேரத்திற்கு முன் நோயாளியை பார்வையிட அனுமதிக்காத நிலையில் ஊடகவியலாளர்கள் வளாகத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

யாழில் ஊடகவியலாளருக்கு எதிராக பொய்யான முறைப்பாடு : சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Investigation Against Journalist In Jaffna

இருப்பினும், ஊடகவியலாளர்கள் தந்திரோபாயமாக மாற்று வழிகளை பயன்படுத்தி கடலில் காயமடைந்தவர் தொடர்பான செய்தியை மருத்துவ மனையின் விடுதியில் தங்கியிருந்த புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தனர்.

குறித்த செய்தியை பார்வையிட்ட பொறுப்பு மருத்துவர், ஊடகவியலாளர் மரியசீலன் திலெக்ஸுக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

வீட்டில் தவறி விழுந்த மாவை சேனாதிராஜா : அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

வீட்டில் தவறி விழுந்த மாவை சேனாதிராஜா : அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

அனுமதி மறுப்பு

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று (27) இரண்டு மணிநேரம் மரியசீலன் திலெக்ஸ் மீது விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஊடகவியலாளர் மரியசீலன் திலெக்ஸ், தானும் தனது சக ஊடகவியலாளரும் குறித்த சம்பவ தினத்தில் செய்தி சேகரிப்பதற்கு மருத்துவமனை அதிகாரிகளிடம் அனுமதி கோரியிருந்ததாகவும், அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தாம் மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

யாழில் ஊடகவியலாளருக்கு எதிராக பொய்யான முறைப்பாடு : சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Investigation Against Journalist In Jaffna

அத்தோடு, மருத்துவர் குற்றம் சாட்டியது போன்று எதுவும் இடம் பெறவில்லையென்றும், அனுமதி மறுக்கப்பட்டதால் தாம் நாகரீகமாக வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொறுப்பு மருத்துவரின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்று சக ஊடகவியலாளர்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் கைதிகளின் விடுதலை : அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

அரசியல் கைதிகளின் விடுதலை : அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026