காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள்! அரசாங்கத்தின் அறிவிப்பு
காணாமல் போனவர்கள் தொடர்பாக 11,000 முறைப்பாடுகள் வரை இருப்பதாகவும், அவை தொடர்பான விசாரணைகள் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பயிற்சி பட்டறை ஒன்றுக்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், விசாரணைகளில் முன்னேற்றம் இல்லாதது தொடர்பிலும் முறைப்பாடுகள் இருப்பதாக கூறியுள்ளார்.
அதிகாரிகளுக்கு பயிற்சி
இருப்பினும், முந்தைய அரசாங்கங்கள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும், என்றும் காணாமல் போனோர் அலுவலகம் (OMP) அல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், OMP உடன் இணைக்கப்பட்ட 375 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்கள் குறித்து தாங்கள் விசாரிப்பதாக கூறிய அமைச்சர், 5,000 முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் இந்த ஆண்டு நிறைவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |