ஒலிம்பிக் போட்டிகளில் திருநங்கைகளுக்கு தடை: ஆலோசானை தீவிரம்
அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்பதற்குத் தடை விதிப்பது குறித்து ஆலோசானை நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆலோசனையை சர்வதேச ஒலிம்பிக் குழு நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2028 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது.
போட்டியாளர்கள்
இந்தநிலையில், குறித்த போட்டியில் திருநங்கைப் போட்டியாளர்கள் பங்கேற்க முழுமையாகத் தடை விதிப்பது குறித்து ஒலிம்பிக் குழுவின் அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரியின் தலைமையில் இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
திருநங்கைகள்
திருநங்கைகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்.

இந்தநிலையில் அமெரிக்காவில் நடைபெறும் போட்டியில் அதனைத் தவிர்ப்பது அநாவசியமான பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என ஒலிம்பிக் குழு முடிவு செய்துள்ளது.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் பிரிவில், திருநங்கைகள் விளையாடுவதைத் தடுக்கும் வகையிலான உத்தரவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |