நடப்பு ஐ பி எல் தொடரில் முதன்முறையாக ஆட்டமிழந்த தோனி
MS Dhoni
Chennai Super Kings
IPL 2024
By Sumithiran
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் இறுதி நேரத்தில் களமிறங்கிய தோனி ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.
இது நடப்பு ஐ பி எல் தொடரில் முதன்முறையாக தோனி ஆட்டமிழக்கும் முதல் நிகழ்வாகும்.
18 ஆவது ஓவரில் களமிறங்கிய தோனி
இந்தப்போட்டியில் 18 ஆவது ஓவரில் தோனி களமிறங்கினார். இதில் 11 பந்துகளை எதிர்கொண்ட எம்.எஸ். தோனி 14 ஓட்டங்களை குவித்தார். இதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.
இரண்டு ஓட்டங்களை எடுக்க
கடைசி ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட அவர் இரண்டு ஓட்டங்களை எடுக்க முயற்சித்த போது ரன் அவுட் ஆனார்.
இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். தோனி முதல் முறையாக தனது விக்கெட்டை இழந்துள்ளார்.
இந்தப்போட்டியில் பஞ்சாப் அணி சென்னை அணியை 07 விக்கெட்டுக்களால் வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்