2026 ஐபிஎல் ஏலம் தொடர்பில் ஐசிபி வெளியிட்ட அறிவிப்பு
Chennai Super Kings
Mumbai Indians
Royal Challengers Bangalore
TATA IPL
IPL 2026
By Dilakshan
2026 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16 ஆம் திகதி அபுதாபியில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் சபை (ஐசிபி) இன்று (13) அறிவித்துள்ளது.
இந்தியாவிற்கு வெளியே ஐபிஎல் ஏலம் நடத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
முதல் ஐபிஎல் ஏலம் 2024 இல் துபாயில் நடைபெற்றது, அதைத் தொடர்ந்து 2025 ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்றது.
வீரர்களின் இறுதிப் பட்டியல்
ஏல திகதி நிர்ணயிக்கப்பட்டவுடன், ஒவ்வொரு அணியும் நவம்பர் 15 ஆம் திகதி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்குள் தங்கள் அணிகளில் இருந்து விடுவிக்கவும் தக்கவைக்கவும் விரும்பும் வீரர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டும்.

ஏலத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய வீரர்களின் இறுதிப் பட்டியல் பின்னர் தயாரிக்கப்படும்.
2026 ஐபிஎல் மார்ச் 15 முதல் மே 31 வரை நடத்த அடிப்படைத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 9 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி