விடுதலைப்புலிகளின் பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கை
ஈழத்தமிழினம் தனது போராட்ட வாழ்வில் ஒரு கட்டாய ஓய்வை ஏற்றிருந்தாலும் கடந்த காலத்தின் போரியல் பெரு வெற்றிகள் ஈழத்தமிழினத்தின் போராட்ட ஓர்மத்தை ஒரு போதும் ஓய விடாது.
இந்த உளவியல் அனுகுமுறையை உணர்ந்துகொண்டபடியாலையே இன்று 16 ஆண்டுகள் கடந்தும் இலங்கை இந்திய புலனாய்வாளர்கள் புலிப்பூச்சாண்டிக் கதைகளை கட்டவிழ்த்து ஈழத்தமிழர் மனங்களில் இருந்து விடுதலைப்புலிகளை அப்புறப்படுத்த பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டுகொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் ஈழத்தமிழர்களின் போரியல் சாதனைகள் காலம் உள்ளவரைக்கும் தமிழ்மக்களின் மனங்களிற்கு போதுமான திருப்தியை தந்திருக்கிறது.
விடுதலைவேண்டிப்போராடிய ஒரு இனமாக அதன் இலக்குகளுக்காக ஒப்பற்ற தியாகங்களைப்புரிந்த உன்னதமான தலைவனையும் தேசத்தாகத்தோடு தங்களை ஆகுதியாக்கிய தேசப்புதல்வர்களையும் தமது நெஞ்சங்களில் சுமந்து உணர்வுந்தல் கோட்பாட்டின் அடிப்படையிலான படி முறைநகர்வுகளை கைக்கொள்வதே ஈழத்தமிழினத்தின் இப்போதைய போராட்ட வடிவமாக இருக்கிறது.
இத்தகைய ஈழத்தமிழர்களிடம் ஒரு வீர வரலாறு தொடர்பாகவும் அந்த வீரமும் ஓர்மமும் கொண்டு களமாடிய படைக்கட்டமைப்பும் பகையை பந்தாடிய வரலாற்று வெற்றிகளும் குறித்தும் விரிவாக விவரிக்கிறது கீழுள்ள காணொளி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |