ஐபிஎல் ஏலம் 2024: இம்முறை கோடிகளை குவிக்கப்போவது யார்.!
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்ப்பார்த்த இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) மினி ஏலம் நாளைய தினம் நடைபெறவுள்ளது.
குறித்த ஏலமானது நாளை(19) டுபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் இந்திய நேரப்படி 2.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
ஐபிஎல் ஏல வரலாற்றில் இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் நடக்கவுள்ளதோடு முதல்முறையாக ஏலத்தை மல்லிகா சாகர் பெண் ஒருவர் நடத்தவுள்ளார்.
மினி ஏலம்
ஐபிஎல் தொடருக்காக மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலமும், ஒவ்வொரு ஆண்டு மினி ஏலமும் நடைபெறும்.
ஐபிஎல்தொடருக்கான வீரர்களை தேர்வு செய்ய இந்த ஏல முறை நடைபெறுகிறது.
2008ஆம் ஆண்டில் இருந்து இந்த முறை நடைபெற்று வருவதோடு புது அணிகள் தொடருக்குள் வரும்போது இந்த நடைமுறை மாறும்.
இறுதிப் பட்டியலிலுள்ள வீரர்கள்
அடுத்த வருடம் (2024)ஐபில் தொடரின் 17 வது பதிப்பு மார்ச்- மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஆண்டு மினி ஏலம் இடம்பெறவுள்ளது.
மினி ஏலத்தில் பங்கேற்க 1166 வீரர்கள் ஐபிஎல் தங்கள் பெயர்களை பதிவு செய்து இருந்த நிலையில் தற்போது 333 வீரர்கள் மட்டுமே இறுதிப் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள்.
214 பேர் இந்தியர்கள் மற்றும் 119 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர். அதிகபட்சமாக 10 அணிகளிலும் 77 இடங்கள் காணப்படுகின்றன.
77 இடங்களில் வெளிநாட்டு வீரர்களுக்கு 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அடிப்படை விலை
இதில் 2 கோடி என்பது அதிக அடிப்படை விலையாகும். 1.5 கோடி ரூபாய் அடிப்படை விலையுடன் 13 வீரர்கள் ஏலப் பட்டியலில் உள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணி 38.15 கோடி ரூபாவுடன் அதிக ஏல பணத்தொகையை கொண்டுள்ளதோடு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 13.15 கோடி ரூபாவுடன் குறைந்த ஏல பணத்தொகையை கொண்டுள்ளது.
ஏலத்திற்கு முன்பாகவே சில அணிகள் சில வீரர்களை ஏலத்திற்கு முன்னதாகவே டிரேடிங் முறையில் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |