மும்பை அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா! குஜராத்திற்கு கூறிய பதில்
ஐபில் கிரிக்கெட் தொடரில் அதிரடியாக ஆடி இந்திய அணியிலும் தவிர்க்க முடியாத வீரராக மாறியுள்ள ஹர்திக் பாண்டியா குஜராத் அணியில் இருந்து மீண்டும் மும்பை அணிக்கு அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குஜராத் அணியுடனான தனது நினைவுகளை ஹர்திக் பாண்டியா சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவரது டுவிட்டர் பதிவில்,
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், அதன் நிர்வாகம் மற்றும் ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாண்டியாவின் கிரிக்கெட் திறமை
இந்த அணியின் தலைவராக செயல்பட எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் கனம் பண்ணுகிறேன். போட்டிகளின் போது எனக்கு வழங்கப்பட்ட ஆதரவுகளுக்கும் அன்புக்கும் எனது குடும்பத்துக்கு நான் நன்றி கூறுகிறேன்.
இந்த அணியுடன் எனக்குள்ள நினைவுகள் மற்றும் அனுபவம் என்றும் என் நெஞ்சில் நீங்கா நினைவாக இருக்கும். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தமைக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
30 வயதாகும் ஹர்திக் பாண்டியாவின் கிரிக்கெட் திறமை 10 ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்பட்டது.
இதனை சரியாக புரிந்துகொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் வெறும் 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
— hardik pandya (@hardikpandya7) November 27, 2023
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |