விறுவிறுப்பான ஐபிஎல் ஏலம் - முழு விபரம் உள்ளே...
ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்களின் ஏலம் கொச்சியில் இன்று (23) நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்க பல வீரர்கள் பதிவு செய்யப்பட்டு அதில் அவர்களில் 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 405 வீரர்கள் ஏலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் 119 வீரர்கள் சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர்கள் ஆவர்.
அதிக தொகை
இந்த 405 வீரர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 87 வீரர்கள் இம்முறை ஏலம் வழியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஐபிஎல் 2022 போட்டியில் 14 தமிழக வீரர்கள் விளையாடினார்கள். இம்முறை ஏலத்தில் 16 தமிழக வீரர்கள் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏலத்தில் இங்கிலாந்து சகலதுறை வீரர் சாம் கரணை 18.50 கோடி இந்திய ரூபாய்க்கு பஞ்சாப் அணி தேர்வு செய்தது. இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு தேர்வான வீரர் என்கிற சாதனையைப் அவர் படைத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
- ரஹானே ரூ. 50 லட்சம்
- ஸ்டோக்ஸ் ரூ.16.25 கோடி
- ஷீக் ரஷீத் ரூ. 20 லட்சம்
- நிஷாந்த் சிந்து ரூ. 20 லட்சம்
மும்பை இந்தியன்ஸ்
- கேம்ரூன் கிரீன் ரூ. 17.50 கோடி
- ஜே ரிச்சர்ட்சன் ரூ.1.50 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
- டாப்லி ரூ. 1.90 கோடி
- ஹிமான் சர்மா ரூ. 20 லட்சம்
குஜராத் டைட்டன்ஸ்
- கேன் வில்லியம்சன் ரூ. 2 கோடி
- ஓடியன் ஸ்மித் ரூ. 50 லட்சம்
- கே.எஸ். பரத் ரூ.1.20 கோடி
- ஷிவம் மவி ரூ. 6 கோடி
டில்லி கேபிடலீஸ்
- பில் சால்ட் ரூ. 2 கோடி
- இஷாந்த் சர்மா ரூ. 50 லட்சம
- முகேஷ் குமார் மணீஷ் ரூ. 5.50 கோடி
- பாண்டே ரூ.2.40 கோடி
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
- ஜெகதீசன் ரூ. 90 லட்சம்
- வைபவ் அரோரா ரூ. 60 லட்சம்
ராஜஸ்தான் ரோயல்ஸ்
- ஹோல்டர் தொகை ரூ.5.75 கோடி
லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ்
- நிகோலஸ் பூரன் ரூ. 16 கோடி
- உனாட்கட் ரூ. 50 லட்சம்
- யாஷ் தாக்குர் ரூ. 45 லட்சம்
சன்ரைசரஸ் ஹைதராபாத்
- ஹாரி புரூக் ரூ. 13.25 கோடி
- மயங்க் அகர்வால் ரூ.8.25 கோடி
- கிளாசென் ரூ.5.25 கோடி
- அடில் ரஷித் ரூ.2 கோடி
- மயங்க் மார்கண்டே ரூ. 50 லட்சம்
- விவ்ராந்த் சர்மா ரூ.2.60 கோடி
- சமர்த் வியாஸ் ரூ. 20 லட்சம்
- சன்வீர் சிங் ரூ. 20 லட்சம்
- உபேந்திர யாதவ் ரூ. 25 லட்சம்
பஞ்சாப் கிங்ஸ்
- சாம் கரண் ரூ.18.50 கோடி
- சிக்கந்தர் ராஸா . ரூ. 50 லட்சம்