அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பேரிடி! உருவாகும் ஈரானின் பாரிய பாதுகாப்பு வளையம்
ஹோர்முஸ் நீரிணையில் இருந்து பாப் அல்-மண்டேப் நீரிணை வரை ஒரு புதிய பாதுகாப்பு வளையம் உருவாகி வருவதாக ஈரானின் குட்ஸ் படைத் தலைவர் இஸ்மாயில் கானி தெரிவித்துள்ளார்.
அதன்படி, அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதற்கு எதிராக ஒருங்கிணைந்த பிராந்திய பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக ஏமனின் சமீபத்திய நடவடிக்கைகளுக்குப் பிறகு, பிராந்தியம் முழுவதும் உள்ள கூட்டணிக் குழுக்கள் தங்களுக்குள் ஆழமான ஒருங்கிணைப்பைக் காட்டியுள்ளதாக கானி குறிப்பிட்டுள்ளார்.
தகுந்த பதிலடி
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள், இப்பிராந்தியத்தை ஒரு பரந்த மோதலை நோக்கித் தள்ளியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய கானி, சியோனிச ஆட்சி மற்றும் அமெரிக்காவின் இந்த ஆத்திரமூட்டல்களுக்கு ஒன்றுபட்ட எதிர்ப்பு முன்னணி தகுந்த பதிலடி கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Image Credit: The New Region
அத்துடன், வளைகுடாவையும் செங்கடலையும் இணைக்கும் மூலோபாய கடல்வழிப் பாதைகளுக்கு அருகில் தங்களது கூட்டணிப் போராளிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள அவர், எல்லைகளற்ற இந்த போராளிகள் உங்களது கடல்சார் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளைக் கண்காணித்து வருவதாகவும், தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டால் அவர்கள் உங்களது கழுத்தைப் பிடிப்பார்கள் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்